தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-18 18:45 GMT

தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ராமலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ், தனிப்பிரிவு ஏட்டு கலைவாணர், பொன்பாண்டி ஆகியோர் அடங்கிய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அய்யனடைப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி அய்யனடைப்பு கணபதி நகரை சேர்ந்த கணேசன் மகன் பிரசாத் (வயது 30), தூத்துக்குடி சிவசக்தி நகரை சேர்ந்த இருளாண்டி மகன் ஆகாஷ் (22), தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த கணேசன் மகன் ஹரிஹரன் (23) என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்