மிரட்டும் வடகிழக்கு பருவமழை: தமிழகம், புதுவையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2022-11-06 15:17 GMT

சென்னை,

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 9ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்.இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுவை, காரைக்காலில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகம், புதுவை, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags:    

மேலும் செய்திகள்