100 பவுன் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல்

100 பவுன் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவன் மீது பெண் புகார் செய்துள்ளார்.;

Update:2023-10-09 00:22 IST

வேலூரை அடுத்த அரியூர் சாய்பாபா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுபாஷினி (வயது 29). இவருக்கு சென்னை அருகம்பாக்கத்தை சேர்ந்த கமலேஷ் (31) என்பவருடன் 8 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கமலேஷ் தன் மனைவியிடம் அடிக்கடி 100 பவுன் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. கமலேசுடன் சேர்ந்து அவரது தாயார் ராஜேஷ்வரி மற்றும் உறவினர்கள் சிலர் சுபாசினியிடம் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சுபாஷினி இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்திய கணவர், மாமியார் உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்