பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-04-05 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே கடுகு சந்தை பகுதியை சேர்ந்தவர் மலையாண்டி மனைவி சிவகாமி (வயது 48). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் என்ற மதியழகன் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது.

இந்நிலையில் நேற்று சிவகாமி வீட்டிற்கு சென்ற மதியழகன் அரிவாளை காட்டி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து மதியழகனை கைது செய்தார். 

Tags:    

மேலும் செய்திகள்