கத்தியை காண்பித்து தொழிலாளிக்கு கொலை மிரட்டல்

கத்தியை காண்பித்து தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Update: 2022-08-20 15:44 GMT


விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்தவர் விநாயகம் (வயது 48), கூலித்தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள தனது மருமகன் பிரகாஷ் (27) என்பவருடைய வீட்டில் இருக்கும்போது அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் மகன் திவாகர் (23) என்பவர் குடிபோதையில் அங்கு வந்து, யார் இங்கே மோட்டார் சைக்கிளை நிறுத்தியது, நான் பெரிய ரவுடி என்றும் என்னை கேட்காமல் எதுவும் நடக்கக்கூடாது என்றும் திட்டிக்கொண்டிருந்தார்.

மேலும் அவர் பிரகாஷின் வீட்டு கதவை கல்லால் அடிக்கும்போது அவரது மாமனார் விநாயகத்தின் தலையில் தாக்கியது. இதை தட்டிக்கேட்ட விநாயகத்தை திவாகர் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து பிரகாஷ், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திவாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்