சிறார் ஆபாச படம் பார்த்ததாக மிரட்டல் - சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி நூதன மோசடி

கிருஷ்ணகிரியில் ஆபாச படம் பார்த்ததாக, நகைக் கடை ஊழியரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-10-05 06:08 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் ஆபாச படம் பார்த்ததாக, நகைக் கடை ஊழியரிடம் சைபர் கிரைம் போலீஸ் எனக் கூறி மிரட்டி பணம் பறித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூரில் உள்ள ஒரு நகைக் கடையில் வேலை பார்த்து வரும் சந்திரகுமார் என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய நபர், சென்னை சைபர் கிரைம் காவல் அலுவலகத்திலிருந்து பேசுவதாகக் கூறியுள்ளார். சந்திரகுமார் சிறார் ஆபாசப் படங்களை பார்த்து வருவதாக கூறி, வழக்கில் இருந்து தப்பிக்க 10 ஆயிரம் ரூபாயை அனுப்புமாறு கேட்டுள்ளார்.

அதை நம்பிய சந்திரகுமார், 'போன் பே' மூலம் அவரின் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பினார். பின்னர், அந்த தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், சந்தேகமடைந்த சந்திரகுமார், கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.

அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது, சேலம் மாவட்டம், கரடூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்து என்பவரும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் ஏமாற்றியது தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 செல்போன்கள், டெபிட் கார்டுகள், 4 சிம்கார்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்