இல்லாத நீர்மூழ்கி மோட்டாருக்கு ஆயிரக்கணக்கில் மின் கட்டணம்

வாலாஜா நகராட்சியில் இல்லாத நீர்மூழ்கி மோட்டாருக்கு ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது.

Update: 2022-12-20 19:27 GMT

வாலாஜாபேட்டை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கோனேரி தெரு, பரசுராமன் தெரு சந்திப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து, நீர்மூழ்கி மோட்டார் பொருத்தி குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த பல வருடங்களாக குடிநீர் தொட்டி மற்றும் நீர்மூழ்கி மோட்டார் பழுது ஏற்பட்டது. அதை சரிசெய்ய எடுத்துச் சென்றனர். அதன்பிறகு இதுவரை மோட்டார் பொருத்தப்படவில்லை. ஆனால் இல்லாத மோட்டாருக்கு பல ஆயிரக்கணக்கில் நகராட்சி சார்பில் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே உடனடியாக பொதுமக்கள் பயன்படும் வகையில் மீண்டும் மோட்டார் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்