1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-07-29 19:00 GMT

முத்துப்பேட்டை,

முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் 1,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது.

அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினம்

அலையாத்திக்காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐக்கியநாடுகள் சபை ஜூலை 26-ந் தேதியை உலக அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது. 2016-ம் ஆண்டு ஜூலை26-ந் தேதி முதல் வருடந்தோறும் அலையாத்திக்காடுகள் பாதுகாப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டு வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கால நிலை மாற்றத்தை சீர்செய்வதில் அலையாத்திக்காடுகளின் பங்கு மிக முக்கியம்.

பாதுகாப்பு அரண்

அலையாத்திக்காடுகள் கடற்கரை ஓரங்களில் உள்ள சேறு கலந்த சதுப்பு நிலங்களிலும் உவர்நீரிலும் வளரக்கூடிய ஒருவகை தாவரம். இவை பல்வேறு நீர்வாழ் உயிரினங்களின் உற்பத்தி இடமாகவும், கடற்கரையோர பகுதிகளுக்கு பாதுகாப்பு அரணாகவும் உள்ளன. முத்துப்பேட்டை அலையாத்திக்காடுகள் தமிழ்நாட்டில் காணப்படக்கூடிய மிகப்பெரிய அலையாத்தி காடுகள் ஆகும். முத்துப்பேட்டையில் காணப்படக்கூடிய அலையாத்திக்காடுகளின் மொத்த பரப்பளவு 14 ஆயிரம் எக்டேர் ஆகும்.

1,000 மரக்கன்றுகள்

இந்தநிலையில் முத்துப்பேட்டை பகுதியில் சுமார் 28ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிட்டு பசுமைத்தமிழகம் இயக்க திட்டத்தின் முதற்கட்டமாக முத்துப்பேட்டை துறைக்காடு காப்புக்காடு, கட்டமுனை பகுதியில் நேற்று 1000 அலையாத்தி மரக்கன்றுகளை வனத்துறையினர் நடவு செய்தனர் இதில் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், வனச்சரக அலுவலர் ஜனனி, சுற்றுச்சூழல் நிபுணர் சிவசுப்பிரமணியன், ஓம்கார் நிர்வாகி பாலாஜி பேரூராட்சி கவுன்சிலர்கள் சரிபா பேகம், மெட்ரோ மாலிக், அபூபக்கர் சித்திக் மற்றும் பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்