அரசின் நலத்திட்ட உதவி கேட்டு வருபவர்களை அலைக்கழிக்க கூடாது

அரசின் நலத்திட்ட உதவி கேட்டு வருபவர்களை அலைக்கழிக்க கூடாது அதிகாரிகளுக்கு வசந்தம் கார்த்திகேயன் எம் எல் ஏ வேண்டுகோள்

Update: 2022-05-29 16:59 GMT

திருக்கோவிலூர்

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக இருக்கக் கூடாது. குறிப்பாக நலத்திட்ட உதவி கேட்டு வரும் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், இலவச மின் இணைப்பு கேட்டு வரும் விவசாயிகள், வேளாண்மைத்துறைக்கு உதவிகள் கேட்டு வரும் விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை அலைக்கழிக்க கூடாது.

அவ்வாறு மீறி செயல்படும் அதிகாரிகள் மீது புகார் வந்தால் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் நேரடி கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்