'ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்'; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-30 06:45 GMT

சென்னை,

கேரள மாநிலம் திருச்சூரில் மலையாள செய்தி ஊடகமான 'மனோரமா' இன்று நடத்தி வரும் 'கான்க்ளேவ்2022'-ல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் நேரில் பங்கேற்றார்.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

கொரோனா தொற்று காரணமாக கான்க்ளேவ் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க முடியவில்லை.

இந்தியா மேலும் வலிமையோடு இருக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் காப்பதே, நாட்டை காப்பதாக அர்த்தம்

தமிழ், மலையாளம் மொழிகளுக்கு இடையே ஆழமான உறவு இருக்கிறது

மாநில அரசுகள் தன்னிறைவை அடைந்தால் மட்டுமே, நாடு வளர்ச்சி அடையும்

மாநில அரசுகள் வலுவாக இருப்பது, மத்திய அரசுக்கு பலம்தானே தவிர பலவீனமல்ல.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; இதுதான் இந்தியாவின் தற்போதைய நிலை.

திமுக தலைமையிலான கூட்டணி தேர்தலுக்கானது அல்ல; கொள்கைக்கான கூட்டணி

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும்.

ஒரே நாடு ஒரே மொழி என்பவர்கள் நாட்டின் எதிரிகள்; இந்தியாவுக்கு ஒரு தேசிய மொழி என்பது சாத்தியமில்லை.

இந்தியாவில் பல மொழி பேசும், பல கலாசாரத்தை பின்பற்றும் மக்கள் உள்ளனர்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்