தொழில் பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து மேற்படிப்பினை தொடர விரும்புபவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-09-21 19:00 GMT

தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்து மேற்படிப்பினை தொடர விரும்புபவர்களுக்கு 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

சான்றிதழ்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித்தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்கள் https://www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்த இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து முத்துப்பட்டியிலுள்ள சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

3-ந் தேதிக்குள்

மேலும், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தகுதிகேற்ப 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற்று, இத்துறையால் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் உரிய கல்வி சான்றிதழ்களுடன் சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வருகின்ற 3-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்