குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள் திடீர் சாலை மறியல்

திருக்கோவிலூரில் 2 இடங்களில் குரூப் 4 தேர்வு எழுத தாமதமாக வந்தவர்கள் திடீர் சாலை மறியல்

Update: 2022-07-24 16:56 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அரசு கபிலர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அங்கவை, சங்கவை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்த 2 தேர்வு மையங்களிலும் தாமதமாக வந்த சுமார் 18 பேரை அதிகாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தேர்வர்கள் மேற்கண்ட 2 பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றிய தகவல் அறிந்து வந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்