வீரவணக்கம் செலுத்த ஊர்வலமாக வந்தவர்கள் கைது

வீரவணக்கம் செலுத்த ஊர்வலமாக வந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-10 18:07 GMT

க.பரமத்தி உள்ள காருடையபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் கடந்த ஆண்டு வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று ஜெகநாதன் படத்தை க.பரமத்தியில் வைத்து வீரவணக்கம் செலுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து ஜெகநாதனுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக சாமானிய மக்கள் நலக்கட்சி பொதுச்செயலாளர் குணசேகரன், தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கல்குவாரி எதிர்ப்பு விவசாயி பழனிசாமி உள்பட 13 பேர் ஊர்வலமாக வந்தனர். அப்போது அங்கிருந்த க.பரமத்தி போலீசார் வீரவணக்கம் மற்றும் ஊர்வலம் செல்ல அனுமதி எனக்கூறி 13 பேரையும் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

பின்னர் அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்