"அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களைப் பார்த்து அஞ்சினர்" - புத்தக விழாவில் கனிமொழி எம்.பி. பேச்சு

சமூகத்திற்கு சில புத்தகங்கள் கிடைக்கக் கூடாது என்பதற்காக பல நூலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

Update: 2022-11-22 19:07 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தகத் திருவிழா 22-ந் தேதி(நேற்று) தொடங்கி 29-ந் தேதி வரை 8 நாட்கள் நடைபெறுகிறது. தூத்துக்குடி- எட்டயபுரம் சாலையில் உள்ள ஏ.வி.எம்.கமலவேல் மகாலில் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடக்கிறது.

இந்த புத்தகக் கண்காட்சியை கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். இதன் தொடக்க விழாவில் பேசிய அவர், அதிகாரத்தில் இருந்தவர்கள் தொடர்ந்து பயந்த விஷயம், புத்தகங்கள் என்றும், இதன் காரணமாக புத்தகங்கள் தடை செய்யப்பட்டு, எழுத்தாளர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் சமூகத்திற்கு சில புத்தகங்கள் கிடைக்கக் கூடாது என்பதற்காக பல நூலகங்கள் எரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். அதோடு இவற்றை இல்லாமல் செய்துவிட்டால், மக்களை அடிமைகளாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருப்பவர்கள் நினைக்கக் கூடியது புத்தகம் என்று கனிமொழி எம்.பி. பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்