முட்புதர்களை அகற்ற வேண்டும்

முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2022-12-27 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூரில் இருந்து உப்பட்டி, நெல்லியாளம், பொன்னானி, பிதிர்காடு, பாட்டவயல் வழியாக சுல்த்தான்பத்தேரிக்கு செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த வழியாக குந்தலாடி, பாட்டவயல், அய்யன்கொல்லிக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. அப்பகுதி மக்கள் சிகிச்சைக்காக சுல்த்தான்பத்தேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகள், பந்தலூர், கூடலூர், ஊட்டி அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வருகின்றனர். பள்ளி, கல்லூரி வாகனங்கள், அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இந்தநிலையில் பந்தலூரில் இருந்து குந்தலாடி செல்லும் சாலையோரத்தில் புதர்மண்டி காணப்படுகிறது. முட்புதர்கள் ஆக்கிரமித்து உள்ளதால், குறுகிய வளைவில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை உள்ளது.

இதனால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. மேலும் சாலையோரத்தில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் விபத்துகளின் போது காயம் அடைந்து வருகின்றனர். எனவே, சாலையோர முட்புதர்களை வெட்டி அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்