தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம்

தூத்துக்குடி யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-29 14:21 GMT

சாயர்புரம்:

தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர்களின் கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள யூனியன் அலுவலகத்தில் யூனியன் குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் நடைபெற்றது, துணைத்தலைவர் ஆஸ்கர் முன்னிலை வகித்தார், யூனியன் மேலாளர் மாசானம் வரவேற்றார், கூட்டத்தில் கூட்டத்தில் தலைவர் பேசுகையில், கோரம்பள்ளம் ஊராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி, முடிவைத்தானேந்தல் மற்றும் அல்லிகுளம் ஆகிய ஊராட்சிகளில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், மேல கூட்டுடன்காடு ஊராட்சியில் தார்சாலை அமைத்தல், திம்மராஜபுரம் பேரூராட்சி பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் யூனியன் தொடக்கப்பள்ளி கட்டிடம் பராமரிப்பு பணி, வணிக வளாகம் பராமரிப்பு செய்தல், முள்ளக்காடு ஊராட்சியில் வடகிழக்கு தெருவில் வாறுகால் அமைத்தல், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்த நிழற்குடை அமைத்தல் உட்பட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார், தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் யூனியன் கவுன்சிலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, யூனியன் மேற்பார்வையாளர் முத்துராமன், சமூக நல விரிவாக்க அலுவலர் சந்தனதாய் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்