தூத்துக்குடி தெப்பக்குளம்மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு மாரியம்மனுக்கு காலை 7 மணிக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் நடந்தது. மாலை 4 மணிக்கு நவ கன்னிகா பூஜையுடன், அம்மனுக்கு பல வகையான பூக்களுடன் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.