தூத்துக்குடி சண்முகபுரம்பத்திரகாளியம்மன் கோவில் தசரா திருவிழா
தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவில் தசரா திருவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி சண்முகபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னதாக நேற்று காலையில் கொடி ஊர்சுற்றி கொண்டு வரப்பட்டு கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக யாகசாலை பூஜையுடன் அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பத்திரகாளியம்மன் கோவில் இந்து சமயவகுப்பு மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் பரதநாட்டியம், நடந்தது. கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.