தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத்தேர் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது

Update: 2023-10-15 18:45 GMT

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய தங்கத் தேர், நேற்று தேர்க்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

தங்கத்தேர்

தூத்துக்குடி கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் தங்கத் தேர் பவனி கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி நடந்தது. இதனை தொடர்ந்து சுமார் ஒரு மாதமாக தங்கத் தேர் ஆலயத்தின் அருகே பக்தர்கள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டு இருந்தது. இங்கு சிறப்பு திருப்பலிகள் நடத்தப்பட்டு வந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இந்த தங்கத்தேரானது சுமார் 85 சதவீதம் புதிதாக உருவாக்கப்பட்டது ஆகும்.

பவனி

எனவே, இதனை பாதுகாப்பாக பராமரிப்பதற்காக புதிதாக தேர்க் கூடம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணி முடிவடைந்ததால், தங்கத் தேரானது தேர்க் கூடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பனிமயமாதா ஆலய பங்கு தந்தை குமார் ராஜா தலைமை தாங்கி ஜெபம் செய்து பவனியை தொடங்கி வைத்தார். அதன்பிறகு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேர்க்கூடத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பேராலய பங்குப் பேரவை கமிட்டியினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்