தூத்துக்குடி தங்கத்தேர்த்திருவிழா: சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில்

தங்கத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

Update: 2023-07-06 01:08 GMT

சென்னை,

தூத்துக்குடி பனிமயமாதா தேவாலயத்தில் அடுத்த மாதம் 5-ந் தேதி தங்கத்தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக தென்னக ரெயில்வே சார்பில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.06005) வருகிற 3-ந் தேதி சென்னையில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 3.10 மணிக்கு தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், இந்த ரெயில் (வ.எண்.06006) வருகிற 4-ந் தேதி தூத்துக்குடியில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. நள்ளிரவு 2.45 மணிக்கு சென்னை சென்றடைகிறது.

இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூா் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்