தூத்துக்குடி மாவட்ட கலெக்டர்செந்தில்ராஜ் திடீர் மாற்றம்

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் திடீர் மாற்றம் செய்யப்பட்டார்.

Update: 2023-05-16 18:45 GMT

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று திடீரென மாற்றம் செய்யப்பட்டார். புதிய கலெக்டராக ஏ.ஆர்.ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

தமிழக அரசு நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறது.

அதன்படி, ஏற்கனவே உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில் நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 42 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

செந்தில்ராஜ் மாற்றம்

அந்த வகையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டராக கடந்த 15.11.2020 முதல் பணியாற்றி வந்த கி.செந்தில்ராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் கூட்டுறவுத்துறை பதிவாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய கலெக்டராக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக பணியாற்றி வரும் ஏ.ஆர்.ராகுல்நாத் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்