தூத்துக்குடி: தாயை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த 5 வயது சிறுவன் பலியான சோகம்...!

கடபூர் அருகே தாயை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-08-20 02:57 GMT

கடம்பூர்,

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே குப்பணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா. இவருக்கு 5 வயதில் கார்த்தி என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று தாய் அர்ச்சனா வீட்டில் சமைத்து கொண்டிருந்த போது திடீரென வீட்டிற்குள் நல்லபாம்பு வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் கார்த்தி, தாயை காப்பாற்றுவதற்காக விரைந்து வந்து பாம்பை விரட்டி உள்ளார். அப்போது பாம்பு சிறுவனை கடித்து உள்ளது.

வலியல் துடித்த சிறுவனை உறவினர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

பாம்பிடம் இருந்து தாயை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்த 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்