தூத்துக்குடி 2-ம் கேட்டில் பழுது:மைசூர் எக்ஸ்பிரஸ் ¼ மணிநேரம் தாமதம்
தூத்துக்குடி 2-ம் கேட்டில் பழுது ஏற்பட்டதால் மைசூர் எக்ஸ்பிரஸ் ¼ மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5.20 மணிக்கு மைசூர் விரைவு ரெயில் புறப்பட்டது. இதற்காக 2-ம் ரெயில்வே கேட்டை ஊழியர்கள் மூட முயற்சித்தனர். ஆனால் ரெயில்வே கேட்டில் திடீர் பழுது ஏற்பட்டதால், ஊழியர்களால் கேட்டை மூட இயலவில்லை. இதனால் மைசூர் விரைவு ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள், வாகனங்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடக்காமல் இருக்க தற்காலிகமாக இருபக்கமும் சங்கிலி மூலம் அடைத்தனர். இதையடுத்து சுமார் 15 நிமிட தாமதத்திற்கு பின்னர் ரெயில் புறப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெயில்வே கேட் பழுது சரி செய்யப்பட்டது. இதன் காரணமாக 2-ம் கேட் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சரி செய்ததனர். இதை தொடர்ந்து மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.