மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தினார்.

Update: 2023-07-15 18:32 GMT

அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.தனது தந்தை தொல்காப்பியனின் 13-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் தாயார் பெரியம்மாளுடன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-கலைஞர் நூற்றாண்டு நூலகம் மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மண்டல வாரியாக அமைக்க வேண்டும். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த நூலகங்களாக அமைவதுடன், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் இளைஞர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும்பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பயன்ெபறும் நோக்கில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான பெண்களுக்கு அந்த உரிமை தொகையை பெறுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கூறி வருகிறார்கள். எனவே மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான கட்டுப்பாடுகளில் சில மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டு வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்