சென்னையில் இந்த முறை மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை" - அமைச்சர் எ.வ.வேலு உறுதி

மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும் என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Update: 2022-10-04 10:13 GMT

சென்னை,

சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிககளை பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி, நீர் மேலாண்மை துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிகால் பணிகளில் 10 சதவீதம் மட்டும் மீதமுள்ளன. பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால் பணிகளை தொடர்ந்து நேரில் ஆய்வு செய்து வருகிறோம்.

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் பாதிக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்த முறை சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்பில்லை. மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடையும்.

மதுரவாயல்-துறைமுகம் மேல்மட்ட சாலை பணிக்கு ரூ.5600 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. 2024ல் மதுரவாயல் உயர்மட்ட சாலை திறக்கும் வகையில் பணிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்