டி.ஜி.பியை இதற்காகத்தான் சந்தித்தேன்...! - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து டிஜிபி-யிடம் சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
சென்னை,
பாஜகவினர் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபுவை அவர் சந்தித்துப்பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.