கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவ மழை அளவு அதிகரிப்பு
கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவமழை அளவு வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத் தில் சராசரியாக210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில்69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ என மொத்தம்211 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில்,பருவமழை தொடங்கிய ஜூன் மாதம் 10 மி.மீ வரை மட்டுமே மழை பதிவானது.பின்னர், ஜூலை மாதம் 2-வது வாரத்தில்பருவமழை தீவிரமடைந்தது.
225 மில்லி மீட்டர்
ஆகஸ்டு முதல்வாரத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. பின்னர், மீண்டும் தற் போதுபருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சிறுவாணிஅணை, கோவை குற்றாலம், சின்னாறு, பெரியாறுகளில் தண்ணீர் வரத்துஅதிகரித்துள்ளது. இதனால், நொய்யல் ஆற்றில் வினாடிக்கு 300 கன அடி தண்ணீர்சென்று கொண்டிருக்கிறது. ஆற்றில் இருந்து குளங்களுக்கு தண்ணீர் திறந்துவி டப்பட்டுள்ளது. 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உள்ளன.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சராசரி மழையளவான 210 மி.மீ மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது. இந்த அளவு கடந்த 30 ஆண்டுகளில் 11-வது முறையாக கோவையில் பதிவான தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. மொத்தம் 225 மி.மீ மழைபெய்துள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்கும்மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பயிர்கள்
தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், இன்னும்கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போதே சராசரி அளவை விடஅதிகளவில் மழை கிடைத்துள்ளதால், விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம்,சிறுதானிய பயிர்கள் மற்றும் காய்கறிகளை விதைக்க சரியான நேரம் என வேளாண்அதிகாரிகள் தெரிவித்துள்னர்.