இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல; தி.மு.க. கூட்டணி தொடரும்-மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடரும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தொடரும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Update: 2022-07-30 08:45 GMT

சென்னை

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சூரில் மனோரமா செய்தி ஊடகம் நடத்தும் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் காணொலி வாயிலாகப் பேசினார். அப்போது தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி தொடரும். இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல. கொள்கை ரீதியான கூட்டணி.தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆரோக்கியமான கூட்டணி தொடரும் என்று கூறினார்.

முன்னதாக செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார். அப்போது அவரும், முதல்-அமைச்சர் ஸ்டாலினும் பேசிக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகின. இருவருக்கும் இடையே நிலவிய இணக்கமான சூழலை பார்த்து தமிழகத்தில் தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமையலாம் என்று பேசப்பட்டது.

இந்நிலையில், பா.ஜ.க.- தி.மு.க. கூட்டணி தொடர்பாக சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்