பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் திருவிளக்கு பூஜை

பெரம்பலூர் பிரம்மபுரீசுவரர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

Update: 2023-01-27 18:59 GMT

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோவிலில் உலக நன்மைக்காக திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குத்து விளக்குக்கு மலர் சாற்றி, தீபம் ஏற்றி குங்கும அர்ச்சனை செய்து கூட்டுவழிபாடு நடத்தினர். அதனைத்தொடர்ந்து சுவாமி, அம்பாள் மற்றும் நந்தியம் பெருமானை வழிபட்டனர். பூஜை ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ராஜா உள்ளிட்ட பக்தர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்