லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

Update: 2023-01-27 18:45 GMT

கிருஷ்ணகிரி பழையபேட்டை லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் பவித்ரோற்சவம், வருஷாபிஷேகம், திருவிளக்கு பூஜை மற்றும் ரதசப்தமி உற்சவம் ஆகியவை நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் காலை கலச ஸ்தாபனம், விஸ்வக்சேன ஆராதனை, பஞ்ச சூத்ர ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், சிறப்பு அபிஷேகம், மகா மங்களாரத்தி மற்றும் தீர்த்தப்பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தன. நேற்று மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், மகா மங்களாரத்தியும் நடந்தன. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி வழிபட்டனர். இன்று (சனிக்கிழமை) காலை கோ பூஜை, விசேஷ அபிஷேகம், ரதசப்தமி உற்சவம் மற்றும் சாமி திருவீதி உலா ஆகியவை நடைபெற உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்