சிவா விஷ்ணு கோவிலில் திருவிளக்கு பூஜை

கீழ்வேளூர் அருகே சிவா விஷ்ணு கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-07-24 18:45 GMT

சிக்கல்:

கீழ்வேளூர் அருகே கூறத்தாங்குடியில் உள்ள சிவா விஷ்ணு கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் உலக நன்மை வேண்டியும், மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி பூஜை செய்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும், விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்