சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

ஆக்கூர் சீதளா தேவி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.;

Update: 2023-08-04 18:45 GMT

திருக்கடையூர்:-

ஆக்கூரில் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சீதளாதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள சீதளாதேவி அம்மனை வழிபட்டால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபடுகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி மாதத்தையொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி சீதளாதேவி மாரியம்மனுக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், மஞ்சள் தூள் மற்றும் பல்வேறு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்