பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ஏழாயிரம் பராசக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
தாயில்பட்டி,
ஏழாயிரம்பண்ணை அன்னை பராசக்தி மாரியம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று 10-வது நாள் திருவிழாவாக பராசக்தி மாரியம்மன் கோவில் வளாகத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் பக்தர்கள் குழு, கோவை ஆதிபராசக்தி மாதர் சங்கம், ஏழாயிரம்பண்ணை அன்னை பராசக்தி மாதர் சங்கம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனை தொடர்ந்து ரதம் நகர்த்திடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஆதிபராசக்தி பக்தர்கள் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.