முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

முத்துமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.;

Update: 2023-08-11 19:44 GMT

ஆடி மாதம் 4-வது வெள்ளிக்கிழமையையொட்டி திருச்சி, முதலியார்சத்திரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் 40-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று இரவு நடந்தது. நோய் நொடிகள் நீங்கவும், மணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டியும் இந்த திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பின்னர் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்