முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

Update: 2023-02-07 18:45 GMT

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தைமாத பவுர்ணமி திருவிளக்கு பூஜையை முன்னிட்டு காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலை 8 மணிக்கு காலசந்தி பூஜை நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். பின்னர் மூலஸ்தான தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் வழிபட்டனர்.

இதேபோன்று விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் சுப்ரமணியபுரத்தில் பத்திரகாளியம்மன் கோவிலில் திருவிளக்குபூஜை நடந்தது.

முன்னதாக பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜைகள் கலந்து கொண்ட பெண்களுக்கு விபூதி, மஞ்சள் கயிறு, வளையல் வழங்கப்பட்டது. விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரமதி சர்மிளா, ஜெயந்தி, செல்வர்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்