மார்க்க சகாயசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை
மூவலூர் மார்க்க சகாயசாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
குத்தாலம்:
மயிலாடுதுறை அருகே மூவலூர் கிராமத்தில் உள்ள மங்கள சவுந்தரநாயகி சமேத மார்க்கசகாயசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் கவுமாரி துர்க்கா பரமேஸ்வரி அம்மனுக்கு 34-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. உலக நன்மை வேண்டியும், பருவமழை பெய்ய வேண்டியும் நடந்த இந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்தனர். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது.