மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
சன்னானோடை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
திருவெண்காடு:
திருவெண்காடு சன்னானோடை பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த திரளான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என சரண கோஷமிட்டனர். பின்னர் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு குங்குமம், பழம், மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.