பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம்

பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-09-15 16:40 GMT

கீழக்கரை, 

கீழக்கரை அருகே உள்ள பாரதி நகர் கிராமத்தில் விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பண்ண சுவாமி, பாலமுருகன் கோவில் 30-ம் ஆண்டு முளைக்கொட்டு உற்சவ விழா நடை பெற்றது. விழாவையொட்டி ஊர் தலைவர் ரவி, தலைமையில் கூட்டுறவு சங்க தலைவர் மாசாணம், ஊராட்சி தலைவர் சரஸ்வதி பாக்கியநாதன், துணைத்தலைவர் ரவி ஆகியோர் முன்னிலையில்காப்பு கட்டு நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து முத்து பரப்புதல் நிகழ்ச்சியும் நடை பெற்றது. தொடர்ந்து கடற்கரை சென்று கரகம் எடுத்து வீதி உலா வந்து பால முருகன் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து முத்து ராஜ் நகர் கற்பக விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம், வேல் காவடி, ரதம் புறப்பட்டு பாரதி நகர் முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தது. கோவிலில் இருந்து பால்குடம், வேல் காவடி, ரதம் புறப்பட்டு கடற்கரை சென்று பூர்ணம் நடைபெற்றது. விழாவில் பாலமுருகன் கமல்ராஜ், முருககுமார், சங்கர் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்