திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம்

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.;

Update:2023-05-10 00:15 IST

திருவெண்ணெய்நல்லூர்;

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டியன், பிரிவு உதவி அலுவலர் அன்பு ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். கூட்டத்தில் குடிநீர், சாலை வசதி, மின்விளக்கு உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் செய்வது குறித்தும், கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவல பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்