செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி

செஞ்சி காசி விஸ்வநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2023-06-18 18:45 GMT

செஞ்சி,

செஞ்சி சிறுகடம்பூரில் உள்ள விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவிலில் திருப்பணி வேண்டி திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி காலையில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து புதுவை காலாப்பட்டு அகத்தீஸ்வரர் கோவில் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதுதல் நிகழ்ச்சியை நடத்தினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்