நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை
நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலையை முதன்மை தலைமை ஆணையர் திறந்து வைத்தார்.;
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார்.
விழாவில் அவர் பேசும்போது, "வாழ்வில் எப்படி வாழ வேண்டும் என கற்றுக்கொடுத்த திருவள்ளுவர் தமிழர்களின் பொக்கிஷம். திருக்குறளையும், அதன் விளக்கத்தையும் மக்கள் எளிதாக புரிந்து கொண்டு அதன்படி வாழ்க்கையில் நடந்து கொள்வதற்காக திருவள்ளுவர் சிலைக்கு கீழே எல்.இ.டி. திரை மூலம் தினந்தோறும் திருக்குறள் வெளியிடப்படும்" என்றார்.
'காலம்தோறும் திருக்குறள்' என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர்கள் எஸ்.ராஜா, பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசினர். விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.