கழுகுமலையில் திருவள்ளுவர் கழக கூட்டம்
கழுகுமலையில் திருவள்ளுவர் கழக கூட்டம் நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலை நடு தெரு விமல் மழலையர் பள்ளியில் திருவள்ளுவர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி மனோகர் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தமிழ் ஆர்வலர் சுப்புலட்சுமி முன்னிலை வகித்தார். விவசாயிகள் சங்க செயலாளர் நம்பிராஜன் வரவேற்றார். முன்னதாக கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி இசை ஆசிரியர் சக்தி இறைவணக்கம் பாடினார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வுபெற்ற தலைமைஆசிரியை விநாயகசுந்தரி கலந்து கொண்டு இல்வாழ்வான் என்பான் என்ற தலைப்பிலும், ஆசிரியர் கிருஷ்ணன் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர். கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ், கோவில்பட்டி கம்பன் கழக தலைவர் துரைப்பாண்டி, செயலாளர் சரவணசெல்வம், துணை தலைவர் ராஜாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். கருப்பசாமி நன்றி கூறினார்.