திருவள்ளுவர் கழக ஆண்டு விழா
கழுகுமலையில் திருவள்ளுவர் கழக ஆண்டு விழா நடந்தது.
கழுகுமலை:
கழுகுமலையில் திருவள்ளுவர் கழக 33-வது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்கள் தாளாளர் லட்சுமணபெருமாள் தலைமை தாங்கினார். போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். அரசு மேல்நிலைப்பள்ளி இசை ஆசிரியர் சக்தி இறைவணக்கம் பாடினார். கோவில்பட்டி திருவள்ளுவர் மன்றம் திருமலை முத்துச்சாமி வரவேற்றார்.
அனைத்திந்திய தமிழ்ச்சங்கம் தென்மண்டல தலைவர் முருகசரஸ்வதி பேசினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
பிளஸ்-2 வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்ற கம்மவார் பெண்கள் பள்ளி மாணவிக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் பரிசு தொகை மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல் நிலைப்பள்ளி பெற்றார் ஆசிரியர் கழக தலைவர் ஜோசப் ரத்தினம், ஆசிரியர்கள் துரைராஜ,் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ்பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.