திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை
செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வரும் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.3 வாகனங்களில் வந்த 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிக தொகைக்கு நடைபெற்றுள்ள பத்திரப்பதிவு குறித்து சோதனை நடந்து வருகிறது. , கடந்த சில நாட்களாக பல கோடி மதிப்பிலான பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பத்திரப்பதிவு தொடர்பான ஆவணங்களை வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகின்றனர் .