அனாதையாக கிடந்த குழந்தையை குழந்தைகள் நல குழுவினரிடம் வழங்கிய திருவள்ளூர் மாவட்ட கலெக்டர்

சாலையோரத்தில் அனாதையாக கிடந்த குழந்தையை குழந்தைகள் நல குழுவினரிடம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

Update: 2023-05-05 12:45 GMT

திருவள்ளூர் வீரராகவர் கோவில் திருக்குளம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த 10 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று சாலையோரத்தில் வெள்ளை துணியில் சுற்றப்பட்டு அனாதையாக கிடந்தது. அந்த குழந்தையை பொதுமக்கள் பார்த்து திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் குழந்தையை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகிற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அந்த குழந்தைக்கு "ஆனந்த்" என்று பெயர் சூட்டி குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பிற்காக திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் நல குழுவினரிடம் ஒப்படைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்