திருவையாறில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவானது
திருவையாறில் அதிகபட்சமாக 70 மி.மீ. மழை பதிவானது
தஞ்சை மாவட்டத்தில் அதிக பட்சமாக திருவையாறில் 70 மி.மீ.மழை பதிவானது.
கோடை மழை
தஞ்சை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்தது. அதிலும் கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திம் தொடங்குவதற்கு முன்னதாக 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தியது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது.
இந்த நிலையில் 2 நாட்களாக தொடர்ந்து மழை கொட்டியது. குறிப்பாக நேற்று முன்தினம் மதியம் பெய்யத்தொடங்கிய மழை இரவு வரை நீடித்தது. அவ்வப்போது விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர் நிலவியது.
திருவையாறில் அதிகம்
நேற்று காலை முதல் மழை இல்லை. வெயில் காணப்பட்டது. நேற்று அக்னி நட்சத்திரம் தொடக்க நாளில் வழக்கத்தை விட வெயில் சற்று குறைவாக காணப்பட்டது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் அவ்வப்போது காணப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் திருவையாறில் அதிக பட்சமாக 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
திருவையாறு 70, திருக்காட்டுப்பள்ளி 55, பூதலூர் 53, பாபநாசம் 33, அய்யம்பேட்டை 42, குருங்குளம் 26, தஞ்சை 25, ஒரத்தநாடு 20, ஈச்சன்விடுதி 16, வெட்டிக்காடு 15, கல்லணை 15, வல்லம் 12, பட்டுக்கோட்டை 10, பேராவூரணி 9, நெய்வாசல் தென்பாதி 6, கும்பகோணம் 6, அணைக்கரை 6, திருவிடைமருதூர் 4, மதுக்கூர் 4.