பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட மேயர்
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் 'மக்களுடன் மேயர்' திட்டத்தின் கீழ் வார்டு வாரியாக சென்று மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார்.
அந்த வகையில் 48-வது வார்டுக்கு உட்பட்ட ராக்கியாபாளையம், பகவதி அம்மன் நகர், சிவசக்தி நகர், பட்டத்தரசி அம்மன் நகர் ஆகிய பகுதிகளில் மேயர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். வீதி, வீதியாக சென்று பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். குடிநீர் வினியோகம், குப்பை பிரச்சினை, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். பொதுமக்கள் தெரிவித்த குறைகளை நிவர்த்தி செய்ய மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேயருடன் வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி கோபால்சாமி, தி.மு.க. வட்ட செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர்.