திருமாவளவன் பிறந்த நாள் விழா

கீழப்பாவூரில் திருமாவளவன் எம்.பி. பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-08-17 17:15 GMT

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் சந்திரன், மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை கீழப்பாவூர் வி.சி.க. பேரூர் செயலாளர் பாலமுருகன் நிர்வாகிகள் கார்த்திக், பாலசுப்பிரமணியன், சுப்புராஜ், முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்