திருமலைக்குமார சுவாமி கோவில் தேரோட்டம்
பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
செங்கோட்டை அருகே பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
விழாவில் நேற்று காலை தேரோட்டமும், கும்பிடு கரண சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் கும்பிடு கரண வேவை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர். பாதுகாப்பு பணிகளில் அச்சம்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.