முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை

குரங்கனி முத்துமாலை அம்மன் கோவிலில் திருமால் பூஜை நடந்தது.;

Update: 2023-02-07 18:45 GMT

தென்திருப்பேரை:

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் தை மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையான நேற்று திருமால் பூஜை நடந்தது. இப்பூஜையை முன்னிட்டு காலையில் முத்துமாலை அம்மனுக்கு விஸ்வரூப தரிசனம், அபிஷேகம், சிறப்பு புஷ்ப அலங்காரம், அதை தொடர்ந்து விநாயகர், நாராயணர், அம்மன், பெரியசாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம் நடைபெற்ற பூஜையின் போது முத்துமாலை அம்மன் தங்க திருமேனி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். நள்ளிரவு 12 மணியளவில் சுவாமி நாராயணர், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருடன் சப்பரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்தும், தேங்காய் பழம் படைத்தும் நேர்த்தி கடன் செலுத்தியும் முத்துமாலை அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியில் சென்னை வாழ் குரங்கணி நாடார் சங்கத்தினர், கோவை வாழ் குரங்கணி நாடார் வணிக சங்கத்தினர், குரங்கணி 60 பங்கு நாடார்கள் மற்றும் எராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்